தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கனிம வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.2) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
சொத்துக்களை பறிமுதல் செய்க...
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பொதுமக்கள் பேசுகையில், "ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீ பாராங்குசநல்லூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில், சட்டவிரோதமாக 25 முதல் 30 அடி வரை குழி தோண்டப்பட்டு கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கில், ஆற்றுமணல் திருடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பலமுறை அலுவலர்களிடம் புகாரளித்தும், வருவாய்த் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாமிரபரணி ஆற்றுப்படுகையில், வருவாய் துறையினரின் உதவியுடன் நாட்டின் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன.
கொள்ளையை எதிர்த்து கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்படுகின்றன. இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி, கனிம வளங்களை கொள்ளை அடிப்போர் மீது வருவாய் மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க:மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன் - அதிர்ச்சி வீடியோ