தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறுமுகநேரியில் பொங்கல் கட்டிகள் உற்பத்தி தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் பொங்கல் கட்டிகள் உற்பத்தி மற்றும் விற்பனை களைகட்டி வருகிறது.

ஆறுமுகநேரியில் பொங்கல் கட்டிகள் உற்பத்தி தீவிரம்!
ஆறுமுகநேரியில் பொங்கல் கட்டிகள் உற்பத்தி தீவிரம்!

By

Published : Jan 6, 2023, 1:28 PM IST

தூத்துக்குடி:பொங்கல் தினத்தன்று அடுப்பு கட்டிகள் அல்லது மண் அடுப்புகளில் பொங்கல் வைப்பது வழக்கம். இதற்காக பொங்கல் கட்டி அடுப்பு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் ஆனந்தன் என்பவர் தலைமுறை தலைமுறையாக பொங்கல் கட்டி தயாரிக்கும் பணியை செய்து வருகிறார்.

இந்த பொங்கல் கட்டிகள் களிமண், வண்டல்மண் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மண் எடுப்பதற்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா,ல் மக்கள் சிமெண்ட் கட்டிகளுக்கு மாறியுள்ளனர். சல்லி சிமெண்ட் மற்றும் மணல் ஆகியவற்றை கலவை செய்து, அதற்கே உரிய அச்சில் ஊற்றி, சுமார் 2 மணி நேரம் காயவைக்கப்பட்டு, பின்பு அதில் வண்ணம் தீட்டி பொங்கல் கட்டியை தயார் செய்கின்றனர்.

மூன்று பொங்கல் கட்டிகள் சுமார் ரூ.150க்கு விற்கப்பட்டு வருகிறது. இங்கு திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, தூத்துக்குடி, காயல்பட்டினம், காயாமொழி போன்ற ஊர்களில் இருந்து அதிகமான மக்கள் பொங்கல் கட்டிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க:"பொங்கல் பரிசில் தேங்காய் கொடுங்க" இளநீரில் ஸ்டிக்கர் ஒட்டி பாஜக போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details