தூத்துக்குடி:காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி வளசலன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் பேசுகையில், “காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசினால் மட்டும் போதாது, கட்சியை நாம் பலப்படுத்தவேண்டும்” என்றார்.
அப்போது, மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான முத்துவிஜயா இருக்கையில் இருந்து எழுந்து, “தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் நீங்கள் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தீர்கள்? ஒரே வார்டில் திமுகவும் போட்டியிட்டது. காங்கிரஸ்சும் போட்டியிட்டது. இதை ஏன் நீங்கள் பேசி முடிக்கவில்லை? இப்படி இருந்தால் கட்சி எப்படி பலப்படும்?” என்று தொண்டர்கள் முன்னிலையில் ஆவேசப்பட்டார்.