திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் விழா மற்றும் விடுமுறை நாள்களில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதியவர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதை சண்முக விலாசம் மண்டபத்தில் உள்ள துலாபாரம் வாசல் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதியவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள்(சேர்கள்) போடப்பட்டுள்ளன.