தூத்துக்குடி விஇ ரோட்டில் தனியார் ஹோட்டல் இயங்கி வருகிறது. நேற்று இரவு (நவ.22) 7.30 மணியளவில் ஹோட்டலின் கீழ்தளத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு ஹோட்டல் மேல்தளம் வரை புகை பரவ தொடங்கியது. இதனால் ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன், போக்குவரத்து நிலைய அலுவலர் அருணாசலம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனே அங்கு வந்து ஹோட்டலின் மின்சார இணைப்பை துண்டித்து தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை முழுமையாக அணைத்தனர்.