தூத்துக்குடி:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஹரிகேசவநல்லூரில் நடைபெற உள்ள ஸ்ரீஅரியநாதர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்திற்க்கு வந்தடைந்தார்.
அப்போது அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “பாரதப் பிரதமர் நேற்று சத்யசாய் என்ற அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ஆன்மீகம் நமது நாட்டு வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டுகிறது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்த ஆன்மீகம் பறந்து பட்ட எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாத ஒரு நம்பிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆன்மீகம் என்பது குறைவாகவே உள்ளது.
எம்பி கனிமொழி மீது குற்றச்சாட்டு:தூத்துக்குடி எம்பி கனிமொழியின் ஒரு கோரிக்கை ஒன்றை பார்க்கையில், அதில் ஒரு மதம் சார்ந்த ஒரு திருவிழாவிற்கு அதிக பேருந்துகளும், ரயில்களும் விட வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார். இங்கு திருச்செந்தூரில் இருந்து எல்லா வழிபாட்டு தலங்களும் உள்ளது.
அதனால் பாரபட்சம் இன்றி எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் கோரிக்கை விட்டிருந்தால் மகிழ்ச்சி. அப்படி இல்லையெனில், ஒரு மதத்தை சார்ந்து செய்வது சரியல்ல. இதில் ஏற்றத்தாழ்வும், பாரபட்சமும் இருக்கக் கூடாது.
இதையும் படிங்க:BJP Executive Arrested: பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!
ஆன்மீகம் உலகிற்கு வழிகாட்டி:தமிழ்நாட்டில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களையோ, விழாக்களையோ பற்றி பேசுவது தவறு என்ற எண்ணம் இருக்கக் கூடாது. முதலமைச்சரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. இந்த பாரபட்சம் இல்லாத ஆன்மீகம் இருக்க வேண்டும்.
மேலும், பாரத பிரதமர் சொல்வதுபோல நமது ஆன்மீகம் உலகிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதிக கோயில்கள் இருக்கும் இடமாக தமிழ்நாடு இருக்கின்றது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.