தூத்துக்குடி அத்திமரப்பட்டி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை அம்மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், அத்திமரப்பட்டி உப்பாத்து ஓடை பகுதியில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் ரூ.27.50 லட்சம் மதிப்பில் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் தடுக்கும் வகையில் கரைகளை பலப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் தூத்துக்குடி மாவட்டம் - Tuticorin corporation
தூத்துக்குடி: மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இன்று ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அத்திமரப்பட்டி முதல் முள்ளக்காடு ஓடை வரை ரூ.6.85 கோடி மதிப்பில் 3,104 மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளையும், சிவந்தாகுளம், குரூஸ் புரம் மற்றும் ஏ.குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பொதுப்பணித் துறை பணிகளையும் பார்வையிட்டனர்.
இப்பணிகள் அனைத்தையும் விரைவுப்படுத்தி இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் அறிவுறுத்தினார். மேலும், மழை காலத்திற்கு முன்னதாக அனைத்து கழிவு நீர் செல்லும் அமைப்புகளை துப்புரவு செய்து வைக்க வேண்டும் எனவும், மழையின்போது எந்தவொரு வெள்ள பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.