தேர்தலுக்குப் பின்பு அரசு அலுவலகங்கள் மே 27ஆம் தேதி இயல்பு நிலைக்குத் திரும்பின. இதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று மாவட்டத்திற்கும் மணிமுத்தாறு, சேர்வலாறு, பாபநாசம் ஆகிய அணைகள் முக்கிய நீர் ஆதாரமாக இருந்துவருகின்றன எனத் தெரிவித்தார்.
இம்மாவட்டங்களின் தினசரி தண்ணீர் உபயோகத்திற்கு 300 கியூபிக் அளவுக்கு தண்ணீர் தேவைப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது அணைகளில் உள்ள நீர் இருப்பு வருகிற ஜூன் 30ஆம் தேதி வரை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் அளவுக்கு போதுமானதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.