தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநருடன் சுமூக உறவு... திருச்செந்தூரில் முருகனை தரிசித்தபின் புதுச்சேரி CM பேட்டி

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததால் தனக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக எண்ண வேண்டாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

By

Published : Nov 24, 2022, 8:19 AM IST

திருச்செந்தூர்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக கூட்டணியுடன், என். ஆர். காங்கிரஸ் கட்சி, ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு முதலமைச்சராக என். ரங்கசாமி உள்ளார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வந்தார். கோயில் பிரகாரம் உள்ளிட்டப் பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர், சிறப்புப்பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து கோயில் பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்டோருக்கு பிரசாதம் வழங்கினார். கோயில் யானை தெய்வானையை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

சாமி தரிசனத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

ஆளுநரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், 'வேறு சில நிகழ்ச்சிகளுக்காக வெளியே செல்ல வேண்டியிருக்கும். ஆதலால் ஆளுநருக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு என சொல்லியிருப்பார்கள். ஆளுநருடனான உறவு சுமூகமாக உள்ளது’ என புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி கூறினார்.

இதையும் படிங்க:அரிட்டாபட்டி: அழியா பல்லுயிர் பாரம்பரியத்தின் நுழைவாயில் - தொல்லியலின் அடையாளம்

ABOUT THE AUTHOR

...view details