தமிழ்நாடு முழுவதும் நாளை (ஏப்.06) ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரம் விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவற்றைப் பிரித்து அனுப்பும் பணி இன்று (ஏப்.5) நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான செந்தில் ராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திற்கும் தேவையான பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டுக் கருவிகள், மாற்றுத்திறனாளிகள் உதவுவதற்காகச் சக்கர நாற்காலிகள், வாக்காளர் பதிவேடு உள்ளிட்டவை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து சார் ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுரைப்படி மாவட்டம் முழுவதும் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களும் 405 மண்டலமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தேர்தல் அலுவலரின் மேற்பார்வையின் கீழ் மூன்று வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
’வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பட்டது’- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் அமைதியான முறையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்த, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்பில் கண்காணிக்கப்படும் - தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ்