தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி திமுக பிரமுகர் கொலையில் அரசியல் போட்டி? - தூத்துக்குடி அண்மைச் செய்திகள்

மது அருந்தி நடனமாடியதை கண்டித்ததற்காக குத்திக் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் கொலை வழக்கில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்பட்ட போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

By

Published : Aug 7, 2021, 3:28 PM IST

தூத்துக்குடி: ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (37). தூத்துக்குடியின் 45வது வட்ட திமுக செயலாளர். இவர் சொந்தமாக ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி சண்முகபுரத்திலுள்ள முனியசாமி கோயிலில் கொடை விழா நடந்துள்ளது.

இதனையடுத்து அங்கு சிலர் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த நடராஜன், அதனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள், நடராஜனை பின்தொடர்ந்து வந்து கல்லால் தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

உயிரிழந்த திமுக பிரமுகர் நடராஜன்

4 பேர் கொண்ட கும்பலால் கொலை

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தென்பாகம் காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடராஜன் அலுவலகத்துக்கு முன்னரே கொலை நடைபெற்றதால், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது 4 பேர் கொண்ட கும்பலால் நடராஜன் கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சண்முகாபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், அஜித்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவான மாரிமுத்து, அந்தோணிசாமி ஆகியோர் காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எழுந்த பிரச்னையின் காரணமாக நடராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் போட்டியில் கொலை?

நடராஜனுக்கு கட்சியில் நல்ல பெயர் இருப்பதாலும், முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர் என்பதாலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக நடராஜன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நிலத்தகராறு பிரச்சினையில் முதியவர் கொலை

ABOUT THE AUTHOR

...view details