தூத்துக்குடி:கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட அத்தை கொண்டான் பகுதியில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் லாவண்யா, இவரது கணவன் தாமோதர கண்ணன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.
லாவண்யாவின் வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழி திருடு போய் உள்ளது. இது தொடர்பாக அந்த குடும்பத்தினர் லாவண்யா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கேட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை லாவண்யா கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன், எதிர் வீட்டிலிருந்து கோழி திருடு போனது குறித்த விசாரணையில் இவர்களின் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் பெற்று விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, நேற்று (அக்.26) லாவண்யாவின் வீட்டிற்குள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்ற கும்பல் ஒன்று பட்டாசுகளை வீட்டின் முன் கொளுத்தியும் சத்தமிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டு கேள்வி கேட்ட அப்பகுதியினரையும் மிரட்டியுள்ளனர்.