தூத்துக்குடி:மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் நேற்று (நவ.3), தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது , “தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பண்டிகை நாளான நவம்பர் 4ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை கையாளவேண்டும். குழந்தைகளை நேரடியாக பட்டாசு வெடிக்க செய்யாமல் பெற்றோர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்கச் செய்ய வேண்டும். கந்த சஷ்டி விழாவை பொறுத்தவரையில் சூரசம்ஹாரம் நடைபெறும் நவம்பர் 9ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சஷ்டி திருவிழாவிற்கு பாதுகாப்பு பணி இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடந்த ஆண்டை போலவே செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது என்பதால் அன்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநில சிறுபான்மை ஆணையத்தை திருத்தி அரசாணை