தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். அதில் குறிப்பாக நகரின் முக்கியச் சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. விபத்துகள் நேர வாய்ப்புள்ள இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காவல் துறையினர் உடனுக்குடன் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்தை சீரமைக்க உதவிடும் வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் சாலை தடுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று (ஆக.14) நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் மாவட்ட போக்குவரத்து துறைக்கு 50 சாலை தடுப்புகள் வழங்கப்பட்டன. அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
சுதந்திர தின விழா முன்னெச்சரிக்கையாக 2000 போலீசார் பாதுகாப்பு: மாவட்ட எஸ்.பி., தகவல் - தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்
தூத்துக்குடி: சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டத்தில் இரண்டாயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
![சுதந்திர தின விழா முன்னெச்சரிக்கையாக 2000 போலீசார் பாதுகாப்பு: மாவட்ட எஸ்.பி., தகவல் மாவட்ட எஸ்.பி பேட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8417370-thumbnail-3x2-tut.jpg)
மாவட்ட எஸ்.பி பேட்டி
மாவட்ட எஸ்.பி பேட்டி
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 18 இடங்களில் வாகனச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 64 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் காவல்துறை