தூத்துக்குடி:கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் வாகனம் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளரான விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் இரவு நேரத்தில் இரு சக்கர வாகன காப்பகத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆனந்தராஜின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்நிலையில் காலை இரு சக்கர வாகன காப்பகத்திற்கு வந்த பணியாளர் கொலை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்று போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.