தூத்துக்குடி:திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உடன்குடி உபமின் நிலையத்தில் உடன்குடி நகர பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வினியோகப் பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்காக 25 கேவி திறனுடைய டிரான்ஸ்பார்மர்கள் உடன்குடி மின் நிலைய பணியாளர் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது.
உடன்குடி உதவி மின் பொறியாளர் மகாலிங்கம் கடந்த மே மாதம் 1ஆம்தேதி ஆய்வு செய்தபோது அங்கு அந்த டிரான்ஸ்பார்மர்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, ஜூன் மாதம் 4ஆம் தேதி மீண்டும் ஆய்வுசெய்த போது அங்கிருந்த 4 டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் காயல் மற்றும் ஆயில்கள் மின்மாற்றிகளில் இருந்து திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடன்குடி உதவி மின் பொறியாளர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.