தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை ஏமாற்றி நகையை அபேஸ் செய்த கூஜா பூசாரி கைது! - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி, பெண்களை ஏமாற்றி தங்க நகைகளைத் திருடிய கூஜா பூசாரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பரிகார பூஜை
பரிகார பூஜை

By

Published : Jun 13, 2021, 8:46 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வில்லிசேரி இந்திரா நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் தம்பதி தங்க மாரிமுத்து, முருகலட்சுமி (42).

முருகலட்சுமி, கொப்பம்பட்டியிலுள்ள மாடசாமி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த கூஜா பூசாரி முத்துராமலிங்கம் என்பவரை சந்தித்துள்ளார்.

கூஜா பூசாரி, முருகலட்சுமியிடம் தங்களுக்கு குடும்பப் பிரச்னை இருக்கிறது; அதற்குப் பரிகார பூஜை நடத்தினால் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார்.

அதை நம்பி முருகலட்சுமி தனது வீட்டிற்கு முத்துராமலிங்கத்தை வரவழைத்து பரிகார பூஜை நடத்தியுள்ளார்.

முத்துராமலிங்கம், முருகலட்சுமியின் 5 பவுன் செயினை கூஜாவில் வைத்து மூடி, அவரது சாமி படத்திற்குப் பின்னால் வைத்துள்ளார். மேலும் அவர் அப்பெண்ணிடம் 48 நாட்களுக்குப் பிறகு கூஜாவை திறந்து பார்த்தால் பிரச்னை தீரும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பல நபர்களை கூஜா பூசாரி ஏமாற்றியது தொலைக்காட்சியில் செய்தி வெளியானது மூலம் முருகலட்சுமிக்குத் தெரியவந்தது. உடனே அதிர்ச்சியடைந்த முருகலட்சுமி தனது நகை கூஜாவில் இருக்கிறதா என பார்த்தார், ஆனால், நகை கூஜாவில் காணவில்லை.

நகையை அபேஸ் செய்த கூஜா பூசாரி கைது

அப்போதுதான் தானும் ஏமாற்றப்பட்டது முருகலட்சுமிக்குத் தெரியவந்தது. இதுகுறித்து முருகலட்சுமி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பலரை ஏமாற்றிய கூஜா பூசாரியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தநிலையில், அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: காணாமல் போன 2 சிறுமிகள், மரத்தில் பிணமாகத் தொங்கிய நிலையில் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details