தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீஸ் ஸ்டேஷன் எப்படி செயல்படுகிறது.. கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி! - SKGS college

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம், கல்லூரியிலும், காவல் நிலையத்திலும் நேற்று நடைபெற்றது.

srivaikundam
ஸ்ரீவைகுண்டம்

By

Published : Aug 9, 2023, 9:57 AM IST

காவல் நிலையத்தில் ஆயுதங்களை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 5-ஆம் தேதி முறுக்கு கடை வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் உட்பட 3 சிறுவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் உடன் படிக்கும் மாணவனின் தந்தை படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளால் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த காவல் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சொகுசு காரில் சென்று திருட்டு.. ஆடு, மாடுகள் தான் டார்கெட்.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி?

முதற்கட்டமாக, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 08) நடைபெற்றது. கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் தலைஅமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி கோடிலிங்கம், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன் உள்ளிட்டோர் பேசினர்.

இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு, காவல் நிலையங்களில் போலீசாரின் பணி என்ன?, குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது போலீசார் அதனை தடுக்க எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்? என்பது குறித்து விளக்கப்பட்டது.

இதையும் படிங்க: சொகுசு காரில் சென்று திருட்டு.. ஆடு, மாடுகள் தான் டார்கெட்.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி?

மேலும், கலவர சூழ்நிலைகளில் அதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள், போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், அவை எந்த சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகிறது விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், போக்சோ சட்டம் குறித்தும் ஏ.டி.எஸ்.பி கோடிலிங்கம், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா ராபர்ட், ரேணுகா ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

படிக்கும் வயதில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் வழக்குகள் பதிவாவதால் வேலை வாய்ப்புகள் பெற முடியாத நிலை ஏற்படுவதும், வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் பெற முடியாத நிலை ஏற்படும் சூழ்நிலை குறித்தும் போலீசார் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

இதையும் படிங்க:Keeladi xcavation: சுடுமண் பாம்பு உருவம் - கீழடியில் அடுத்த ஆச்சரியம்!

ABOUT THE AUTHOR

...view details