தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் கௌரி சங்கர். இவர் தூத்துக்குடி தருவைக்குளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெனிபர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த நிலையில் கௌரி சங்கர் கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார்.
தூக்குபோட்டு தற்கொலை கொண்ட கௌரி சங்கர் இந்நிலையில், இன்று கெளரி சங்கர் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கெளரி சங்கரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக காவலர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.