தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்நிலைகள் தூர்வாரும் இரண்டாம் கட்ட பணிகள் பிப்ரவரியில் தொடக்கம் - தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பு பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக இயக்குனர் சத்யகோபால் தகவல்

தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட குளம் தூர்வாரும் பணிகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பு பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக இயக்குனர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

Officers who inspect the water bodies
நீர்நிலைகளை ஆய்வு செய்யும் அலுவலர்கள்

By

Published : Nov 27, 2019, 3:14 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் குளங்கள், கண்மாய்கள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்ட நீர்வள ஆதார அமைப்புகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்கள், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குளங்களில் பணிகள் நிறைவடைந்த குளங்களை தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பு பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக இயக்குனர் சத்யகோபால் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யகோபால், தூத்துக்குடி மாவட்டத்தில் 36 குளங்களை மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டதில் 12 குள பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. பல குளங்களில் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மாநிலம் முழுவதும் 1,800 குளங்கள் தூர்வார திட்டமிடப்பட்டத்தில் சுமார் ஆயிரம் குளங்கள் முழுமையாக தூர்வார்ப்பட்டுள்ளன. எஞ்சிய 800 குளங்கள் 80 முதல் 90 சதவீதம் அளவிற்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. குளம் மறுசீரமைப்பு பணிகள் முடிவடையாத குளங்களில் பருவமழைக்கு பின் வேலை தொடங்கப்படும்.
தண்ணீர் உபரியாக வெளியேறுவதை தடுக்கும் வகையில் இத்திட்டத்தில் முதலில் வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து மதகுகள் சரிசெய்யப்பட்டு, கரைகள் பலபடுத்தப்பட்டன. இதனால் அரசு எதிர்பார்த்தது போன்று தற்போது பெய்த பருவமழையால் தண்ணீர் அதிகளவில் சேமிக்கப்பட்டுள்ளன.

நீர்நிலைகளை ஆய்வு செய்யும் அலுவலர்கள்

இரண்டாவது கட்டமாக குடிமராமத்து பணிகள் தொடங்குவதற்கு குளங்கள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டுக்கான குடிமராமத்து பணிகள் வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணிகளை தொடங்கி ஜூலை மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. தற்சமயம் ரூபாய் ஆயிரம் கோடி வரை திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் அதிக நிதி ஒதுக்கீடு பெறப்படும். தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மறுசீரமைப்பு கழகத்தின் மூலம் தமிழ்நாட்டில் மழை நீரை நீண்ட கால தேவைக்கு ஏற்ப சேமிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக அகற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.

இதையும் படிங்க:விழுப்புரத்தில் அரசு பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும்: சி.வி.சண்முகம் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details