தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக பிரமுகர் ஆம்னி பேருந்தை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள் - விவேகம் ரமேஷ்

தூத்துக்குடியில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறி தவறியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

பாஜக பிரமுகரின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
பாஜக பிரமுகரின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

By

Published : Sep 26, 2022, 10:13 AM IST

Updated : Sep 26, 2022, 10:22 AM IST

தூத்துக்குடி: பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவரும், ஆர்எஸ்எஸ் நிர்வாகியுமான விவேகம் ரமேஷ் விவேகம் டிராவல்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு ஆம்னி பஸ்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இவரது ஆம்னி பஸ் நேற்று இரவு திருச்செந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோயம்புத்தூருக்கு புறப்பட்டது. இந்த பஸ் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே வந்து பயணிகளை ஏற்றிசெல்லும பொழுது புதிய பஸ் நிலைய மேம்பாலத்திலிருந்து மர்ம நபர்கள் பேருந்தை நோக்கி பெட்ரோல் குண்டு வீசி தப்பிச் சென்றனர்.

பாஜக பிரமுகர் ஆம்னி பேருந்தை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு

அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு பஸ்ஸின் மீது படாமல் தரையில் விழுந்தது. இதனால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக விவேகம் ரமேஷ் வடபாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:‘தமிழ்நாட்டில் அமைதியை கெடுக்கும் வகையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு’ - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

Last Updated : Sep 26, 2022, 10:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details