தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக். 05) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதேபோல் தமிழ்நாடு சிகை அலங்கார தொழிலாளர்கள் சார்பில் அதன் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், மருத்துவர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மனு இது குறித்து செய்தியாளர்களிடம் இசக்கிமுத்து தெரிவித்ததாவது, "மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 2019ஆம் ஆண்டு முதலே மனு கொடுத்துவருகிறோம். ஆனால் மாவட்ட நிர்வாக அலுவலர்களும், அரசும் எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை.
ஆகவே மீண்டும் அலுவலர்களுக்கு நினைவூட்டும்விதமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தசரா திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் மனு