தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொட்டும் மழையில் கொட்டகை அமைத்து உடலை எரியூட்டும் மக்கள் - தகனம்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி கிராமத்தில் இறந்தவர் உடலை தகனம் செய்ய தகன மேடை இல்லாததால் பொதுமக்கள் கொட்டும் மழையில் தகர கொட்டகை அமைத்து தகனம் செய்த அவலநிலை நிகழ்ந்துள்ளது.

கொட்டும் மழையில் கொட்டகை அமைத்து உடலை எரியூட்டும் மக்கள்; திறந்தவெளியில் தகனம் செய்யும் அவலநிலை
கொட்டும் மழையில் கொட்டகை அமைத்து உடலை எரியூட்டும் மக்கள்; திறந்தவெளியில் தகனம் செய்யும் அவலநிலை

By

Published : Nov 30, 2022, 10:38 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட இந்திரகாலனி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு இனாம்மணியாச்சி ஊருக்குள் செல்லக்கூடிய முகப்பில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு திறந்த வெளியில் இருப்பதால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திறந்த வெளியில் தான், சடலங்களை புதைப்பது அல்லது எரியூட்டும் நிலை உள்ளது.

சுடுகாட்டினை சுற்றி சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். தகனமேடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் தற்பொழுது வரை நடவடிக்கை இல்லை. இதனால் திறந்த வெளியில் சடலத்தை எரியூட்டும் போது அப்பகுதி வழியாக பொது மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

கொட்டும் மழையில் கொட்டகை அமைத்து உடலை எரியூட்டும் மக்கள்; திறந்தவெளியில் தகனம் செய்யும் அவலநிலை

மேலும் சுடுகாடு பகுதியில் எவ்வித பாதைகளும் சரியாக இல்லை என்பதால் மிகுந்த சிரமத்துடன் தான் சடலத்தினை கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கற்பூர ராஜ் என்பவர் உயிரிழந்து விட்டார். அவரது உடலை எரியூட்ட அப்பகுதி மக்கள் கொண்டு வந்த போது திடீரென மழை பெய்ததால் வேறு வழியின்றி தகரங்களை வைத்து கொட்டகை அமைத்து எரியூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து நடவடிக்கை இல்லை, எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:பொங்கலுக்குள் தயாராகுமா கிளாம்பாக்கம் பேருந்து முனையம்..? அமைச்சர் ஆய்வு..

ABOUT THE AUTHOR

...view details