தூத்துக்குடியில் கடந்த இரண்டு வாரங்களாக விடாமல் கனமழைபெய்துவருகிறது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 30ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 160 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பாதித்த இடங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.
மழை பாதிப்பு குறித்து தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் கூறுகையில், "தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் தற்போது பெய்துள்ள கனமழையால் இந்தப் பகுதி மேலும் மோசமடைந்துள்ளது.