தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள விவகாரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து, தூத்துக்குடியில் தினம் தினம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை இன்று(ஏப்.29) சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி பணியைத் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர்கள், "உலகத்திலேயே வாழும் உயிர் சூழலுக்காக 15 உயிர்களை பலி கொடுத்த ஊர் என்றால் அது தூத்துக்குடி.
எனவே 15 பேரின் உயிர் தியாகத்தால் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்தி எனும் பெயரில் திறப்பதற்கு அனுமதி அளித்ததை நயவஞ்சகச் செயலாக கருதுகிறோம்.