தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வையாளர்களை கவர்ந்த சித்த மருத்துவ கண்காட்சி - சித்த மருத்துவக் கண்காட்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்

தூத்துக்குடி: சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கண்காட்சி நடைபெற்றது.

santheep
santheep

By

Published : Jan 11, 2020, 3:48 PM IST

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கூடம் ஆகியவை இணைந்து மூன்றாவது ஆண்டு சித்த மருத்துவ தின விழாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவ கண்காட்சி, சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு சித்த மருத்துவக் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜ செல்வி, சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய அலுவலர் இளங்கனி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சித்த மருத்துவக் கண்காட்சியில் மகளிர் மருத்துவம், தொற்று நோய் விழிப்புணர்வு, சித்த மருத்துவ சிகிச்சை முறைகள், வர்ம மருத்துவம், சித்த மருத்துவ வாழ்வியல், சுக பிரசவத்திற்கான மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தொடர்ந்து நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அழகியல், மலர் மருத்துவம் கையேடுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து இயற்கை சித்த மருத்துவம் குறித்து மருத்துவர்கள் விளக்க உரையாற்றினர்.

வீதி மீறல் : தரைமட்டமாக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்!

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "அகத்தியர் பிறந்தநாளை முன்னிட்டு 3ஆம் ஆண்டு சித்த மருத்துவக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் சித்த மருத்துவம், பாரம்பரிய உணவுகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details