தூத்துக்குடி:இந்தியாவின் முதல் பாரா சைக்கிள் ஓட்டுநரும், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உரிமையாளருமான ஆதித்யா மேத்தா பாரா ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள் பயணத்தை ஏற்பாடு செய்தார்.
இவரது தலைமையில், நாட்டின் சிறந்த பாரா சைக்கிள் ஓட்டுநர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு “இன்ஃபினிட்டி 2020”இன் ஒரு பகுதியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சைக்கிள் பயணம், ஸ்ரீநகரின் தால் ஏரியில் இருந்து நவம்பர் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது.
எல்லை பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ ராகேஷ் அஸ்தானா இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஸ்ரீநகர், உதம்பூர், ஜம்மு, சண்டிகர், டெல்லி, நொய்டா, மதுரா, தோல்பூர், ஜான்சி, நாக்பூர், ஹைதராபாத், அனந்த்பூர், தருமபுரி, கரூர், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக சைக்கிள் பயணம் டிசம்பர் 31ஆம் தேதி 3842 கிலோமீட்டர் 35 பெருநகரங்களையும் கடினமான மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளையும் கடந்து கன்னியாகுமரியில் முடிவடைய உள்ளது.