புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் 437ஆம் ஆண்டுப் பெருவிழா இன்று கோலாகலமாகக் நடைபெற்றது. இந்த ஆலயத்தின் ஆண்டுபெருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வந்த ஆண்டுப் பெருவிழாவின் நிறைவு நாளான நேற்று, தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை ஆயர் என்.ஏ.பன்னீர்செல்வம் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
மதநல்லிணக்கத்தை போற்றும் பனிமய மாதா ஆலய திருவிழா - மதநல்லிணக்கம்
தூத்துக்குடி: கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது இந்து, இஸ்லாமிய மக்களும் கலந்து கொள்ளும் பனிமய மாதா ஆலயத்தின் 10ஆம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பனிமய மாதா
இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான மாதா திருதேர் பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பனிமய மாதாவை வணங்கி வழிபட்டனர். ஆண்டுதோறும் இத்திருவிழாவில் கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது இந்து, இஸ்லாமிய மக்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.