தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் பொன்ராஜ்(63). இவர் தெற்குத் திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள பண்ணைத்தோட்டத்தில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.
தகவல் அறிந்த கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சடலத்தைக்கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.