தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இ.வேலாயுதபுரம் கிராமத்தில் இ.சி.ஆர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு தெற்குப் பகுதியில் உள்ள மேலத் தெருவில் மயானப் பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது தொடர்பான விவரங்களை கோரி, முத்துச்செல்வம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளிக்கப்பட்டிருந்தது.
அதில், இ.வேலாயுதபுரம் கிராமத்தில் குறிப்பிட்ட மேலத்தெருவில் மயான பாதை அமைக்க 5.4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி தென்புறத்தில் 180 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலத்தில் சாலை போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இ.சி.ஆர் தென்புறப்பாதையானது பேவர் பிளாக் சாலை, 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் 2020 -21 திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆர்டிஐயில் தெரிவிக்கப்பட்டிருந்தது.