தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனை ஓலை பொங்கலுக்கு தயாராகும் தூத்துக்குடியும் பனைத்தொழிலாளர்களின் நிலையும்!

தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள், பனை ஓலையினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரம்பரிய பனை ஓலை பொங்கலுக்கு தயாராகும் தூத்துக்குடி
பாரம்பரிய பனை ஓலை பொங்கலுக்கு தயாராகும் தூத்துக்குடி

By

Published : Jan 6, 2023, 10:42 PM IST

பாரம்பரிய பனை ஓலை பொங்கலுக்கு தயாராகும் தூத்துக்குடி

தூத்துக்குடி: மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பராம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு தான் பயன்பாட்டில் உள்ளது, பொங்கல் பண்டிகையின்போதும் கூட சிலர் கேஸ் அடுப்பில் தான் பொங்கல் வைத்து கொண்டாடும் நிலை உள்ளது.

இப்படி இருக்கும் சூழலில், தென் மாவட்டங்களில் இப்போதும் பலர் தங்கள் வீடுகளின் முற்றத்தில் மண் அடுப்பு செய்து, மண் பானையில் அரிசியிட்டு, பனை ஓலை எரித்து, பொங்கலிட்டு பாரம்பரிய முறையை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனா்.

இதனை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அந்தோணியார் புரம், சுப்பிரமணிய புரம், சாயர்புரம், உடன்குடி ஆகியப் பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரங்களில் இருந்து பனை ஓலைகள் தற்போது பனை மரங்களில் வெட்டி எடுத்து விற்பனைக்கு கொண்டுவரத் தயாராகி வருகின்றன.

வருடம்தோறும் பனை ஓலையை வெட்டி, காயவைத்து கட்டுகளாக கட்டி சேகரித்து, பொங்கல் பண்டிகை தொடங்கும் ஒரு வாரத்திற்கு முன்னா், ஏராளமான பனை மரங்களில் இருந்து காய்ந்த பனை ஓலைகளை வெட்டி தூத்துக்குடி நகா் மற்றும் முக்கிய இடங்களில் விற்பனை செய்வது வழக்கம். மேலும் இவை வாகனங்களில் ஏற்றி தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பப்பட்டும் வருகின்றன.

இது குறித்து அந்தோணியார் புரம் பகுதியைச் சோ்ந்த பனை தொழிலாளி கூறுகையில், ”எங்களது குடும்பம் பாரம்பரியமாக பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 65 வருடங்களாக பனை மரம் ஏறி வருகிறேன். தற்போது பொங்கலை முன்னிட்டு பனை ஓலையை வெட்டி விற்பனை செய்து வருகிறோம். ஆறு மாதம் வரை ஓரளவிற்கு வருமானம் வரும். ஆனால் அவை போதுமானதாக இருக்காது.

எனக்கு 78 வயதாகிறது. தற்போது வரை பனை மரம் ஏறி வருகிறேன். எங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. வியாபாரிகளிடம் சென்றால் கிடைப்பதும் கிடைக்காமல் போகிறது. வீட்டு செலவுகளுக்கு கூட மீண்டும் கடன் வாங்கி தான் வாழ்ந்து வருகிறோம். இப்படி இதில் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் பாரம்பரியத்தை விடக்கூடாது என்பதற்காக தற்போது வரை இதனை செய்து வருகிறேன். அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் மற்றொரு தொழிலாளி கூறுகையில், “எனது குடும்பத்தில் நான் மட்டும் பொங்கல் பண்டிகை நாட்களில் பனை ஓலையை சேகரித்து விற்பனை செய்து வருகிறேன். பனை ஓலைகளை வெட்டி காய வைத்து, அதனை விற்பனைக்கு கொண்டு செல்வோம். 4ல் இருந்து 5 பனை ஓலை கொண்ட ஒரு கட்டினை 15 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். இதனை, வியாபாரிகள் பொது மக்களுக்கு 30 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து வருகின்றனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:'பொங்கலோ பொங்கல்' - தமிழர் மரபுப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

ABOUT THE AUTHOR

...view details