தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 13ஆம் தேதி முதலாவதாக 4.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆக்ஸிஜன் உற்பத்திப் பணி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறை சீர்செய்யும் முயற்சியில் ஆலையின் தொழில்நுட்பக் குழு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஈடுபட்டது.
தற்போது, ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.