தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட்டப்பிடாரம் திமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்த கே.என்.நேரு! - Ottapidaram bi-election

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக தேர்தல் பணிமனையை, முன்னாள் அமைச்சரும் இந்த தேர்தல் பொறுப்பாளருமான கே.என்.நேரு திறந்து வைத்தார்.

KNNehru

By

Published : Apr 30, 2019, 9:19 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பணி மேற்கொள்வதற்காக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தலைமை தேர்தல் பணிமனை திறக்கும் விழா முத்தையாபுரத்தில் நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் திமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்த கே.என்.நேரு

இதில், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details