சீறாப்புராணம் காப்பியம் தந்த தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவரின் 378ஆவது ஆண்டு பிறந்த தின விழா அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபம் வளாகத்தில் இன்று (அக். 23) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, உமறுப்புலவர் சங்க தலைவர் காஜா மைதீன், அரசுத்துறை அலுவலர்கள், இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டு உமறுப்புலவரின் நினைவிடத்தில் மலர் போர்வை சாத்தி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது அவர்களாக முடிவு செய்ய வேண்டிய விஷயம். அரசு இதில் நேரடியாக தலையிட்டு கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடிகர் சங்கத்தினர் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.