தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் மறைமுகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நினைக்கும் நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மத்திய, மாநில அரசுகள் எதற்கு?
“ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தா நிறுவனம் வேண்டுமென்றால் மத்திய, மாநில அரசுகள் எதற்கு?” என கேள்வி எழுப்பினர். மேலும், 13 பேர் இறப்புக்கு காரணமான இந்நிறுவனம் மறைமுகமாக திறப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.