தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் பழனிசாமிக்கு கோவில்பட்டியில் எதிர்ப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி: கோவில்பட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீர்மரபினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவில்பட்டி
கோவில்பட்டி

By

Published : Mar 27, 2021, 12:20 PM IST

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தமிழ்நாடு அரசு, வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது. இதில் சீர்மரபினருக்கு 7% உள் இட ஒதுக்கீட்டையும் அறிவித்தது. இந்நிலையில் அதிமுக அரசு தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், 7% உள் இட ஒதுக்கீடு எனக் கூறி 68 சமுதாய மக்களையும் ஏமாற்றிவிட்டதாகவும் தமிழ்நாடு முழுவதும் சீர்மரபினர் அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழலில் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் கடம்பூர் ராஜுவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய நேற்று (மார்ச் 26), முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி வந்தார்.

அப்போது அவருக்கு எதிராக கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகில், சீர்மரபினர் கருப்புக் கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதையும் படிங்க:வருமானவரித்துறை சோதனை ஏன்? துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details