தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு - தூத்துக்குடி டூவிபுரம்

தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.
வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.

By

Published : May 16, 2022, 8:29 AM IST

தூத்துக்குடி : டூவிபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் சுரோஷ். பெயிண்டரான இவரின் மனைவி 10 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். எனவே இவரின் குழந்தைகள் திருநெல்வேலியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வருகின்றனர். சுரேஷ் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவரது தாயார் ஆனந்தி அவருக்கு உணவு கொண்டுவந்து வந்துள்ளார். அப்போது அவர் கதவை திறக்காததால் சாப்பாட்டை வீட்டுக்கு வெளியே வைத்து சென்று விட்டார். பின்னர், மதியம் வந்து பார்க்கும்போது சாப்பாடு அப்படியே இருந்த இடத்திலேயே இருந்துள்ளது. இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் நடு அறையின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுரேஷின் உடலை மீட்டனர். சம்பவத்தை தூத்துக்குடி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொறுப்பு நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகரில் கடந்த வாரம் அண்ணாநகர் பகுதியில் வீடு இடிந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கணவரின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரம்... வீட்டுக்கு தீ வைத்த முதல் மனைவி... 4 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details