தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் இன்று முதல் அமல்

தூத்துக்குடி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் சோதனை முறையில் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

one nation one ration scheme in tutucorine
one nation one ration scheme in tutucorine

By

Published : Feb 1, 2020, 3:51 PM IST

ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் ஜனவரி மாதம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜூன் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக இத்திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 'ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் 957 கடைகளிலும் மென்பொருள் பண்பேற்றம் செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளது. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் 5 சதவிகிதம் கூடுதலாக ரேஷன்பொருட்கள் இருப்பு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சோதனை முறையில் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தின்படி, ஊரகப் பகுதியில் ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அதே வருவாய் கிராமத்தில் உள்ள மற்ற கடைகளில் பொருள்களை வாங்க முடியாது. மாற்றாக பக்கத்து வருவாய் கிராமத்தில் உள்ள கடைகளிலோ, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலோ அல்லது மாவட்டத்தில் வேறு ஏதாவது ரேஷன் கடைகளிலோ பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர் சந்திப்பு

தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் மட்டும் திட்டத்தின் மூலம் பயன்களை பெற முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் மற்ற வெளியூர் வாசிகள், வெளி மாநில வாசிகள் திட்டத்தின்படி இந்தியா முழுவதும் திட்டத்தை அமல்படுத்துகையில் பயன்பெற முடியும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்துக்கான அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details