தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ.1,24,800 - Thoothukudi Crime news

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய்
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய்

By

Published : Mar 9, 2021, 6:09 AM IST

கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள சென்னமரெட்டிபட்டி சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை சோதனையிட்டதில், அதில் பயணித்த வேலுச்சாமி (60) ஆசீர்வாதம் (38) ராமசுப்பு (40) ஆகிய வியாபாரிகள் மூவரிடமிருந்து ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய் பணம் வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். மூன்று பேரும் விளாத்திகுளத்தில் இருந்து மதுரைக்கு மளிகைப் பொருள்கள், பழங்கள் வாங்க மதுரைக்கு சென்றதாக தெரிகிறது.

பணத்தை பறிமுதல்செய்த பறக்கும் படை அலுவலர்கள் விளாத்திகுளம் வட்டாட்சியர் ரகுபதியிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details