தூத்துக்குடி: திரேஸ்புரம் நாட்டு படகு மீனவர்கள், மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் ராஜை கண்டித்து இன்று (நவ. 6) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்வளத்துறை சார்பாக, கடந்த 3ஆம் தேதி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் ராஜ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டு படகு மீனவர்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது, மீன் வளத்துறை உதவி இயக்குநர் மோகன் ராஜ் மீனவர்களிடம் படகுகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.
படகுகளில் பச்சை வண்ண நிறம் அடிக்க வேண்டும். தொழில் செய்வதற்கு ஜிஎஸ்டியுடன் பில் வேண்டும். படகுகளில் நான்கு பேருக்கு மேல் கடலுக்குள் செல்லக்கூடாது. டீசல் வாங்குவதற்கு அந்தந்த நபர்கள் தான் செல்ல வேண்டும் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது மீனவர்களுக்கு பொருந்தாத கோரிக்கை என்றும், மீனவர்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் ராஜை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் இன்று ஒருநாள் (நவ. 6) தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நாட்டுப் படகு மீனவர்கள் சங்கச் செயலாளர் ரீகன் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் நாட்டுப் படகுகள் உள்ளது. தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ் என்பவர் மீனவர்களை அவமதிப்புடன் நடத்தி வருகிறார். மீனவர்களுக்கு உண்டான தேவையை தேடி சென்றால் மரியாதை குறைவாக நடத்துகின்றார்.