தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியக் கப்பல் மாலுமிகளுக்கு கரோனா இல்லை! - Tuticorin district news

தூத்துக்குடி: வ.உ.சிதம்பரனார் துறைமுக மார்க்கமாக பணிக்குச் செல்லும் இந்தியக் கப்பல் மாலுமிகள் எவருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரை இறங்கிய மாலுமிகளுக்கு கரோனா இல்லை
கரை இறங்கிய மாலுமிகளுக்கு கரோனா இல்லை

By

Published : Jun 19, 2020, 2:43 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி முதல் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மார்க்கமாக இந்தியக் கப்பல் மாலுமிகள் பணிக்குச் சென்றும், பணிமுடிந்து தரையிறங்கியும் உள்ளனர். கடந்த ஜூன் 15ஆம் தேதி வரை இதேபோல் 32 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

அதில் 88 மாலுமிகள் பணிக்குச் சென்றுள்ளனர். 114 மாலுமிகள் தரையிறங்கியுள்ளனர். இச்சூழலில் பணிக்குச் சென்ற அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என துறைமுகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details