தூத்துக்குடி:கரோனா பேரிடர் காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி என்எல்சி தமிழ்நாடு அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் நேற்றிரவு (ஜூன் 14) முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு சுமார் ஆயிரத்து 200 ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமாக மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை அடுத்து ஒரு யூனிட்டில் (500 மெகாவாட்) மின்உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மின் மற்றொரு யூனிட்டில் 250 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெற்று வருகிறது.