தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேதங்கள் தவிர்ப்பு' - nivar cyclone damages

தூத்துக்குடி: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயல் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

minister-kadambur-raju
minister-kadambur-raju

By

Published : Nov 26, 2020, 9:57 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பியூர் பேட்டரி கடை திறப்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு கடையைத் திறந்துவைத்தார்.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நிவர் புயலில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக அனைத்துப் பணிகளையும் ஆய்வுசெய்தார். அனைத்துத் துறை அலுவலர்களும் முழுவீச்சில் செயல்பட்டனர்" எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "படைப்புழுld தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு கடந்த காலங்களில் நிவாரணம் வழங்கிவந்துள்ளது. கடந்தாண்டு பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த 50 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. அதேபோல இந்தாண்டும் முதல்கட்டமாக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:மீனவர்களுக்காக ரூ.100 கோடியில் பல்வேறு திட்டம் அறிவிப்பு - கடம்பூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details