தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுமண தம்பதிகள் திருமணம் - விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு இலவசமாக முகக் கவசம் - newly married couple

தூத்துக்குடி: கரோனா விதிமுறைகளை பின்பற்றி தூத்துக்குடியில் புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கினர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு இலவசமாக முகக்கவசம்
தூத்துக்குடியில் புதுமண தம்பதிகள் திருமணம் - விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக முகக்கவசம்

By

Published : Jun 5, 2021, 7:00 AM IST

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சங்கரமூர்த்தி. பிரைன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று (ஜூன் 4) திருமணம் நடைபெறும் எனத் தேதி குறிக்கப்பட்டது.

தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக திருமணத்தை தள்ளி வைக்க விரும்பாத மணமகள் வீட்டார், திட்டமிட்டப்படி குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்த முடிவுசெய்தனர். அதன்படி நேற்று சங்கரமூர்த்தி-முத்துச்செல்வியின் திருமணம் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

திருமணத்திற்காக நெருங்கிய உறவினர்கள் 25 பேருக்கு மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருமணம் நடைபெற்று இருந்தாலும் பொதுமக்கள் முழுமையாக ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுமண தம்பதிகள் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மணமக்களுக்கு மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு இலவசமாக முகக்கவசம்
இது குறித்து, மணமகள் முத்துச்செல்வி கூறுகையில், ’’எங்களது திருமணம் பெரியோர்களால் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நிச்சயிக்கப்பட்டு திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. கரோனாவுக்காக நாங்கள் முகச் கவசம் அணிந்துகொண்டு திருமணம் செய்துகொண்டோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலவசமாக முகக் கவசங்களையும் வழங்கினோம். கரோனாவை எதிர்கொள்ள அனைவரும் முகச் கவசம் அணியுங்கள், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

ABOUT THE AUTHOR

...view details