தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகரில் உள்ள முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் (22), ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி அன்று தூத்துக்குடி திரு.வி.க.நகரைச் சார்ந்த கார்த்திகா (21) என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அன்று மாலை கார்த்திகாவின் உறவினர்கள் மாரிசெல்வம் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி மாரிசெல்வம் - கார்த்திகாவை கரம் பிடித்ததால் பெண் வீட்டார் கடும் கோபத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், இன்று(நவ.2) மாலை வீட்டிலிருந்த மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா தம்பதியை இருவரையும் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இருவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் வந்து பார்த்தபோது கும்பல் தப்பியோடியுள்ளது. பின்னர், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.