தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதுரோடு - எட்டயபுரம் சாலை சந்திப்பில் தானியங்கி சிக்னல், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, தானியங்கி சிக்னலையும், சிசிடிவி கேமிராக்களையும் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியதாவது, கோவில்பட்டியில் 6 லட்சம் ரூபாய் செலவில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு, 10 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், நகரப்பகுதி மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்துவதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.