தென்னிந்தியாவின் பொருளாதார இயந்திரமாக செயல்பட்டுவரும் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சென்ற நிதியாண்டு 7.39 லட்சம் டிஇயு சரக்கு பெட்டிகள் கையாண்டது. தற்போது அதைவிட 7.41 லட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இச்சாதனையானது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 9.51 விழுக்காடு அதிகமாகும்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை ஏற்றுமதி, இறக்குமதியில் சாதனை படைத்து வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டு தற்போதுவரை 33.11 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது சென்ற நிதியாண்டில் கையாண்ட அளவான 31.44 மில்லியன் டன் சரக்குகளை ஒப்பிடுகையில் 5.30 விழுக்காடு அதிகமாகும்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் சீனக் கப்பல் வருகையால் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை!