தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு விவகாரத்தில் விஷம பரப்புரை செய்கிறது திமுக - வேலூர் இப்ராஹிம் குற்றசாட்டு! - பாஜக சிறுபான்மையினர் பிரிவின் மாநில செயலாளர் இப்ராஹிம்

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து எந்த விலக்கும் தரமுடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ள நிலையில், மக்களையும் மாணவர்களையும் ஏமாற்ற திமுக அரசு தொடர்ந்து விஷம பரப்புரை செய்து வருவதாக பாஜக சிறுபான்மை பிரிவின் மாநில செயலாளர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

விரிவுரையாளர்கள் அமைச்சரிடம் மனு
விரிவுரையாளர்கள் அமைச்சரிடம் மனு

By

Published : Jul 4, 2021, 11:01 PM IST

தூத்துக்குடி:பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக சிறுபான்மை அணியின் மாநில செயலாளர் இப்ராஹிம் கலந்து கொண்டு அரிசி, வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த பேசிய அவர், "ஜெய்ஹிந்த் என்பது நமது தேசத்தின் மந்திரச்சொல்லை, ராணுவ வீரர் ஒருவர் தேசத்திற்காக உயிரை விடும் போது கூறுகின்ற வார்த்தையை சட்டப்பேரவையின் குறிப்பிலிருந்து நீக்கியிருப்பதையும், ஆளுநர் உரையில் பதிவு இடம் பெறாமல் நீக்கியதை ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பெருமையாக பேசுகிறார். அதனை முதலமைச்சர் ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது தேசவிரோத கருத்துக்களை ஆழமாக விதைக்கிறார்கள் எனக் காட்டுகிறது.

சீமான், இந்தியா என்பது கடந்த காலத்தில் இல்லை. இனிமேலும் இந்தியா என்ற நாடு இருக்காது என்று கூறுவதை திமுகவும் முதலமைச்சரும் கண்டிக்காதது, தேசவிரோத சக்திகளை இவர்கள் ஊக்குவிக்கிறாகளா என்ற கேள்வியை எழுப்புகிறது.

பெட்ரோல் டீசல் விலையைப் பொறுத்த வரையில், ஜிஎஸ்டி வரம்பிற்குள் மாநில அரசுகள் வருமேயானால் விலை கணிசமாக குறைக்கமுடியும். ஆனால் சில மாநில அரசுகள் அவ்வாறு செய்யாமல், ஒன்றிய அரசை குறை கூறுகின்றனர்.

அதைபோல் கரோனா தடுப்பூசி வழங்குவதிலும் ஒன்றிய அரசையே குறை சொல்லி வருகின்றனர். இதற்கு இவர்களே காரணம் என்று மக்களுக்கு நாங்கள் தெளிவு படுத்துவோம்.

மேலும் நீட் தேர்வை பொறுத்த மட்டில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு எந்த விலக்கும் தர முடியாது என்று தெளிவாக கூறியுள்ளது. அதன் பின்னரும், மக்களையும் மாணவர்களையும் ஏமாற்ற திமுக அரசு செய்த தொடர் விஷம பிரச்சாரம் தான் நீட் தேர்வு விலக்கு என்று கூறுவது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு: சூர்யாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய பாஜக

ABOUT THE AUTHOR

...view details