தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி வேண்டும் - பரப்புரையில் கனிமொழி பேச்சு - kanimozhi

தூத்துக்குடி: மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் மத்திய மாநில அரசுகள் தூக்கியெறியப்பட வேண்டும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

kanimozhi

By

Published : Mar 31, 2019, 9:26 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி இன்று திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மன்புரம், ஆறுமுகநேரி, புன்னக்காயல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மீண்டும் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை உருவாகிவிடும். தமிழ்நாட்டில் தற்போது பாஜகவின் பினாமி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு நினைப்பதை அப்படியே செயல்படுத்தக்கூடியவர்கள்தான் இங்கே ஆட்சியில் உள்ளார்கள்.

தொடர்ந்து மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை கொண்டுவந்து திணிப்பதில் முனைப்புடன் செயல்படுகிறார்கள். எனவே மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கின்ற ஆட்சி உடனடியாகத் தூக்கி எறியப்பட வேண்டும். மத்தியில் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். அதேபோல தமிழ்நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக திகழும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் அமைய வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details