தமிழில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை அவர் காதலித்துவருகிறார். இருவரும் இணைந்திருப்பது போன்ற புகைப்படங்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டுவருவதால், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நயன்தாரா, நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்றுவருகிறது.